திருவான்மியூரில் தவெக பொதுக்குழு கூட்டம் மார்ச் 28-ல் நடக்கிறது.

by Editor / 20-03-2025 01:03:17pm
திருவான்மியூரில் தவெக பொதுக்குழு கூட்டம் மார்ச் 28-ல் நடக்கிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வருகிற மார்ச் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதனையொட்டி அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்வாகிகள் சென்னை திருவான்மியூரில் உள்ள மண்டபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதால் ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டது. கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேறப்படவுள்ளது.

 

Tags : திருவான்மியூரில் தவெக பொதுக்குழு கூட்டம் மார்ச் 28-ல் நடக்கிறது.

Share via