ஏப்ரல் 9ல் திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம்

by Staff / 25-02-2023 02:21:10pm
ஏப்ரல் 9ல் திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம்

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பங்குனித் திருவிழா வருகிற மார்ச் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 7ஆம் தேதி பட்டாபிஷேகம் ஏப்ரல் 8ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறும் என்றும், ஏப்ரல் 9ஆம் தேதி காலை திருத்தேரோட்டம் நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories