லாரி மோதி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலி

by Staff / 04-06-2023 01:32:26pm
லாரி மோதி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலி

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து நடந்துள்ளது. தொண்டங்கி மண்டலம், ஏ.கோட்டப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை லாரி ஒன்று சாலையோரம் இருந்த குடிநீர் தொட்டியில் மோதி பின்னர் அருகில் இருந்த விநாயகர் கோயிலில் மோதியது. இந்த விபத்தில், கோயிலில் தூங்கிக் கொண்டிருந்த லாரி டிரைவர் தொட்டி சேகர் (28), கிளீனர் நாகேந்திரன் (23), சோமு லட்சுமண ராவ் (48) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 

Tags :

Share via
Logo