அரசியல் செய்யும் நேரம் இல்லை - ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ஒடிசாவில் விபத்து ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டபின் பேட்டியளித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பினார். இதுகுறித்து தற்போது பதிலளித்துள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “ஒடிசா ரயில் விபத்து தொடர்பான மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. 'கவாச் கருவி' இருந்திருந்தாலும் விபத்தை தடுத்திருக்க முடியாது. ரயிலை வேறு தடத்திற்கு மாற்றுவதில் (Electronic Interlocking) ஏற்பட்ட பிரச்னையே விபத்துக்கு காரணம். இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல” என தெரிவித்துள்ளார்.
Tags :