280கிலோ குட்கா பறிமுதல்..

அண்ணா நகர் 3வது அவென்யூவில் உள்ள பெட்டிக்கடையில், அண்ணா நகர் போலீசார் சோதனை செய்த போது, அங்கு, சில குட்கா பாக்கெட்கள் சிக்கின.கடையின் உரிமையாளர் செல்வேந்திரன், 42, என்பரை விசாரித்த போது, அமைந்தகரையில் உள்ள மளிகை கடையில் வாங்கியது தெரிந்தது. இதையடுத்து, அமைந்தகரை, திருவீதி அம்மன் கோவில் தெருவில், மளிகை கடை நடத்தி வரும் மணிகண்டன், 40, என்பவரிடம் போலீசார் விசாரித்தனர்.அவரது கடைக்கு பின்புறத்தில் உள்ள கிடங்கில் சோதனை செய்த போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான 280 கிலோ குட்கா சிக்கியது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
Tags :