ஒமிக்ரான் எதிரொலியாக சர்வதேச அளவில் 11,500 விமானங்கள் ரத்து.!!
உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் பல நாடுகளில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
விமான ஊழியர்கள் ஓமிக்ரானால் பாதிக்கப்படுவது அல்லது பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்புடைய காரணத்தால் தனிமைப் படுத்தி கொள்வது போன்ற பிரச்சினைகளால், விமான சேவையை தொடர்ந்து நடத்த போதிய அளவில் ஊழியர்கள் கிடைக்கவில்லை எனவும், அதனால் விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் விமான நிறுவனங்கள் கூறுகின்றன.
அந்த வகையில் உலகம் முழுவதும் கிறிஸ்துமசுக்கு முந்தைய நாள், கிறிஸ்துமஸ், கிறிஸ்துமசுக்கு அடுத்த நாள் ஆகிய 3 நாட்களில் மட்டும் சுமார் 6 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனால் பண்டிகை கொண்டாட சொந்த நாடு செல்ல இருந்த பல பயணிகள் தவிப்புக்கு ஆளாகினர்.
இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை வரை 11,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் யூனைடெட், டெல்டா மற்றும் ஜெட்பூளு ஆகிய 3 விமான நிறுவனங்கள் 10 சதவீதத்துக்கும் அதிகமான விமானங்களை ரத்து செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த 'சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்' விமான நிறுவனம் ஒரேநாளில் 350க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளது.
Tags :