எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை
எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை
நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத், திமுக தலைவர் டிஆர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்றதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிவேனை தலைவர் உத்தவ் தாக்கரே, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோருக்கும் சோனியா அழைப்பு விடுத்ததாகவும், அவர்களுக்குப் பதிலாகவே சஞ்சய் ரௌத் மற்றும் டிஆர் பாலு கூட்டத்தில் பங்கேற்றதாகவும் கூறப்படுகின்றன.எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில் வரும் நாள்களில் இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கத்தைக் கண்டித்து ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, திருச்சி சிவா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை பேரணியாகச் சென்றனர்.
Tags :