கார் ஷெட்டில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு
சென்னை பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் தகர ஷெட்டால் அமைக்கப்பட்ட பார்க்கிங் பகுதி உள்ளது. இந்த பகுதியில் நேற்று (அக். 15) பலத்த மழை பெய்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. மழை காரணமாக 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பார்க்கிங் பகுதிக்குள் பதுங்கியது. தகவலறிந்து வந்த தாம்பரம் தீயணைப்பு துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Tags :



















