1½ வயது குழந்தையை ஆற்றில் வீசி கொலை செய்த தாய்
கர்நாடகாவின் ராமநகர் சன்னபட்னாவில் செவ்வாய்க்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. துணி துவைக்க ஆற்றுக்கு வந்த அப்பெண் குழந்தையை தண்ணீரில் வீசி கொன்றுள்ளார். பின்னர் குழந்தை ஆற்றில் தவறி விழுந்து விட்டதாக கூச்சலிட்டு நாடகமாடியுள்ளார். இன்று குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. குழந்தையின் தாய் பாக்யம்மா (21) கைது செய்யப்பட்டார். இவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். கள்ளக்காதலனுடனான உறவுக்கு இடையூறாக இருந்ததால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
Tags :



















