ஊராட்சி தலைவராகிறார் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மனைவி

by Editor / 25-09-2021 10:50:25am
ஊராட்சி தலைவராகிறார் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மனைவி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு அக்.,6ம் தேதியும், தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு அக்.,9ம் தேதியும் தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி துவங்கி 22ஆம் வரை நடைபெற்றது.ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் கட்சிகள் தங்களின் அடிமட்ட பலத்தை அதிகரிக்கும் வகையில் தனியாக நிற்பது வழக்கம். அதேபோல் ஒவ்வொரு ஊரிலும் புகழ்பெற்று விளங்கும் நபர்கள், பிரபலங்கள் தனித்து சுயேட்சையாக போட்டியிடுவதும் வழக்கம். அந்த வகையில் மேல்மருத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அடிகளாரின் மனைவி லட்சுமி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்செங்கல்பட்டு மாவட்டம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது மேல்மருவத்தூர். இங்குள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடம்தான் இந்த ஊரின் அடையாளமாக தெரிவித்து வருகிறது. தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் இங்கு வருகிறார்கள். அதிக வருமானம் உள்ளதால், ஆதிபராசக்தி அறக்கட்டளை மூலமாக மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, சி.பி.எஸ்.இ பள்ளிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை இயங்குகின்றன.இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேல்மருத்தூர் ஊராட்சி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட காரணத்தினால், போட்டியிட முடியாத சூழல் உருவானது. மீண்டும் இந்த ஊராட்சி பொதுத் தொகுதியாக மாற்றி உள்ளதால், போட்டியிட வேட்புமனு தாக்கல் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வேட்பு மனு மீதான பரிசீலனை நேற்றுடன் முடிவடைந்தது. இதில் லக்ஷ்மியின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது , இதைத்தொடர்ந்து போட்டி இன்று மூன்றாவது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via