மதுபோதையில் காவலரிடம் சண்டையிட்ட இளைஞர் கைது

by Staff / 06-03-2025 03:28:21pm
மதுபோதையில் காவலரிடம் சண்டையிட்ட இளைஞர் கைது

மதுரை மாநகர் கீரைத்துறை காவல்நிலைய எல்லைக்குள் உட்பட்ட தெற்குவாசல் திருவியங்கேஸ்வரர் கோவில் வீதி அருகே இரு இளைஞர்கள் மதுபோதையில் ஆபாசமான வார்த்தைகளால் பேசியபடி சண்டையிட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கீரைத்துறை காவல்நிலைய காவலர் சக்திவேல் மதுபோதையில் இருந்த இருவரையும் எச்சரித்து வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். 

அப்போது அதில் ஒருவர் அங்கிருந்து சென்ற நிலையில் மற்றொருவரான கீரைத்துறை பகுதியைச் சேர்ந்த விஜய் காந்தி என்ற இளைஞர் அங்கிருந்து செல்லாமல் காவலர் சக்திவேலிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது காவலரிடம் வைத்திருந்த வாக்கிடாக்கியை பறிக்க முயன்றுள்ளார். அப்போது விஜயகாந்தியை தடுக்க முயன்றபோது இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் காவலர் சக்திவேல் கீழே விழுந்து கால் எலும்பில் முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் மதுபோதையில் காவலரை தாக்கியதாக விஜயகாந்தியை கீரைத்துறை காவல்துறையினர் கைது செய்தனர். மதுபோதையில் காவலரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகரில் மது மற்றும் கஞ்சா போதையில் இளைஞர்கள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகும் நிலையில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 

Tags :

Share via