குற்றால அருவிகளில் நீராட சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு.

by Editor / 16-01-2025 10:40:23am
குற்றால அருவிகளில் நீராட சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு.

தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் விடுமுறையை கழிப்பதற்காக காலை முதல் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள நீர்நிலைகளுக்கு திரண்டு வர தொடங்கியுள்ளனர் இதன் ஒரு பகுதியாக குற்றாலம் பேரருவியில் நேற்று வரை ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதி காணப்பட்ட நிலையில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் வருகை அதிகரித்துள்ளது குற்றாலம் பேரருவி, ஐந்தருவி பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயனிகள் விடுமுறையை கழிப்பதற்காக திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகள் பொதுமக்களில் வருகை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் பொதுமக்களின் பாதுகாப்பை நலனை கருத்தில் கொண்டு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் குற்றாலம் பகுதியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

 

Tags : குற்றால அருவிகளில் நீராட சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு.

Share via