திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவு எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் எக்ஸ் தள பதிவில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்ப்பட்டி பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் , வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் சரிவர உறுதிசெய்யப்படாதது குறித்து நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும் காட்டாச்சி நடத்தும் இந்த விடியா திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவே, இதுபோன்ற தொடர் விபத்துகளும் உயிரிழப்புகளும். மெத்தனப் போக்கின் மொத்த உருவாக இருக்கும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்க இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
Tags :