“கள்ளக்குறிச்சியில் அரசு துரித நடவடிக்கை எடுத்தது” - முதல்வர்

தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்று வரும் கூட்டத் தொடரில் பேசிய முதலமைச்சர், “கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் 24 மணி நேரத்தில் அரசு துரித நடவடிக்கை எடுத்தது. சாத்தான்குளம் சம்பவத்தை அப்போதைய அதிமுக அரசு மறைக்க நினைத்தது. அதனால், திமுக சிபிஐ விசாரணை கேட்டது. கள்ளக்குறிச்சி சம்பவம் போல் இனி நடந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், எஸ்பி தான் பொறுப்பு” என்றார்.
Tags :