சாத்தூரில் தனியார் கல்லூரி வாகனம் விபத்து20 மாணவியர்கள் காயம்.

by Editor / 06-05-2022 09:42:37pm
சாத்தூரில் தனியார் கல்லூரி வாகனம் விபத்து20 மாணவியர்கள் காயம்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், ஒ.மேட்டுப்பட்டி கிராமம் அருகே இன்று ஏழாயிரம் பண்ணையிலிருந்து சாத்தூர் தனியார் கல்லூரியை நோக்கி சென்று கொண்டிருந்த கல்லூரி வாகனம் விபத்துக்குள்ளானது. வாகனத்தில் பயணம் செய்த சுமார் 60 மாணவியர்களில் 20 - ற்கும் மேற்பட்ட மாணவிகள் காயமடைந்தனர்.

பின்னர், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, மதுரையில் தனியார்  மருத்துவமனையில் 2 மாணவியும், விருதுநகர் அரசு மருத்துவமனையில் 6 மாணவிகளும், சாத்தூர் அரசு மருத்துவமனையில் 10 மாணவிகளும் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, விருதுநகர் மற்றும் சாத்தூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் மாணவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி. ஆகியோர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்கள்.

மேலும், சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும், சிகிச்சைகளும் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்  அறிவுறுத்தினார்.
 

சாத்தூரில் தனியார் கல்லூரி வாகனம் விபத்து20 மாணவியர்கள் காயம்.
 

Tags :

Share via

More stories