மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்த ஹாஸ்டல் வார்டன் பெற்றோர்கள் சரமாரியாக தாக்குதல்

ஆந்திரப் பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி விடுதியில், மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்த வார்டனை, பெற்றோர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். சவுரி பாய் என்ற பெண் வார்டன், மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்வது, குளிப்பதை வீடியோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு சென்ற பெற்றோர்கள், வார்டனை நடுரோட்டில் வைத்து, சரமாரியாக தாக்கியுள்ளனர்.
Tags :