அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை

by Editor / 17-10-2022 08:40:04am
அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 20ஆம் தேதி வரை 4 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo