காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிச்சென்ற இளைஞரை 10 மணி நேரத்தில் கைது.

by Editor / 06-08-2024 11:25:20pm
காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிச்சென்ற இளைஞரை 10 மணி நேரத்தில் கைது.

சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தில் திடீரென அதிகாலையில்  காவல் நிலையத்தின் அருகே  பயங்கர சத்தம் கேட்டதையறிந்த இரவு காவலர் ராமச்சந்திரன் வெளியே வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது. உடனடியாக சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் கபிலன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு  தகவல் கொடுத்ததின் பேரில் தடயவியல் நிபுணர்களை  வரவழைத்து ஆய்வு மேற்கொண்டு பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து  காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி தனிப்படை அமைத்து காவல் நிலையத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

அப்போது எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீசி சென்ற நபரின் இருசக்கர வாகனம் நின்று இருந்ததை கண்டறிந்த போலீசார் அங்கு பதுங்கி இருந்த எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பழைய எடப்பாடி பகுதியைச் சேர்ந்த  பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டிருந்த கட்டபிரபு என்பவரின் மகன் ஆதி என்கிற ஆதித்யா (20)என்ற இளைஞரை எடப்பாடி  போலீசார் கைது செய்து  காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது தன்னை பிரபலப்படுத்திக் கொள்ளவே இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார் ..

மேலும் ஆதித்யாவின் தந்தை கட்டபிரபு மீது ஏற்கனவே 13 குற்றவழக்குகள் உள்ள இந்நிலையில் அவரது மகன் தற்போது காவல் நிலையத்திலேயே பெட்ரோல் குண்டு வீசி முதன்முதலாக குற்றச்சம்பவத்தில் மாட்டிக்கொண்டு 5 பிரிவுகளின் கீழ் கைதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் எடப்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ...

இது குறித்து சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் கபிலன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிச்சென்ற இளைஞரை 10 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாகவும், கைது செய்யப்பட்ட இளைஞர் ஆதி என்கிற ஆதித்யா தனது பெயர் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே இந்த செயலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது எனவும் இது போன்ற தவறுகள் செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். அப்போது மாவட்ட துணை கண்காணிப்பாளர் ராஜா உட்பட காவல்துறையினர் பலரும் உடன் இருந்தனர் ...

 

Tags : காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிச்சென்ற இளைஞரை 10 மணி நேரத்தில் கைது

Share via