12 ஆண்டுகளில், பல்வேறு காரணங்களால் அதிகளவில் யானைகள் இறந்துள்ளதாக தகவல்.
தமிழகத்திலுள்ள மேற்குதொடர்ச்சிமலைத்தொடர்பகுதிகளில் யானைகள் வாழ்ந்துவருகின்றன.அதே சமயம் அதிகளவில் யானைகள் உயிரிழக்கும் பகுதிகளாகவும் மேற்குதொடர்ச்சிமலைப்பகுதிகள் இருந்துவருகின்றன.மேற்குதொடர்ச்சிமலைப்பாகுதிகளில் யானைகளின் இறப்பு அதிகரிப்பதற்கான காரணங்கள் குறித்து அறிக்கை கூறுகிறது. இதன்படி 2010ஆம் ஆண்டு முதல் 12 வருடங்களில் 1501 யானைகள் உயிரிழந்துள்ளனஎன தகவல்கள் வெளியாகியுள்ளன.(இந்த தகவல்கள் அதிகாரபூர்வமாக வனத்துறை சார்பில் அளிக்கபட வில்லை)
இதில் 77 யானைகள் மின்சாரம் தாக்கி பலியாகின, 13 யானைகள் பல்வேறு வழிகளில் வேட்டையாடப்பட்டும், 11 யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, 8 யானைகள் ரயில் விபத்தில் உயிரிழந்தன, 4 யானைகள் சாலை விபத்தில் உயிரிழந்தனஎன்றும்,
யானைகளை துப்பாக்கியால் வேட்டையாடுவது குறைந்தாலும், வேறு வழிகளில் யானைகள் கொல்லப்படுகின்றன. மயில்களை கொல்லும் வயல்களில் சோளத்துடன் கலக்கப்படும் ரசாயனத்தால் யானைகளும் கொல்லப்படுகின்றன. இதேபோல், காட்டுப்பன்றிகளை விரட்ட சிறிய வெடி பொருட்களை பயன்படுத்தி யானைகளும் கொல்லப்படுகின்றன என்று ஆய்வு கூறுகிறது. மற்றொரு முக்கிய எதிரி மின்சார வேலி.
கோவையில் தடாகம், மதுக்கரை, மருதுவமலை, சிறுமுகை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை தின்று யானைகள் உயிரிழந்தன. பிளாஸ்டிக் கழிவுகளை தின்று யானைகள் இறப்பது மெதுவாக நடக்கிறது.
அதிக இடமும் உணவும் தேவைப்படும் காட்டில் யானைகள் மிக முக்கியமான விலங்குகள். தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் இதன் இருப்பு காடுகளுக்கு பாதுகாப்பு காரணியாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் யானைகளின் இறப்பு அதிகரித்து வருகிறது.
யானை இறப்பு தணிக்கை கட்டமைப்பானது மாநிலத்தில் யானை இறப்புகளை பதிவு செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் மிகவும் விரிவான மற்றும் வெளிப்படையான செயல்முறையை செயல்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டது. யானைகளின் இறப்பிற்கான காரணங்களை கண்டறிய பிரேத பரிசோதனைகளை நடத்துவதற்கு முறையான மற்றும் தரப்படுத்தப்பட்ட நெறிமுறையை அறிக்கை பரிந்துரைக்கிறதுஎன தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே சமயம் அசாம் மாநிலத்தைப் பொறுத்தவரை தற்போது மொத்த யானைகளின் எண்ணிக்கை 5,700ஆக உள்ளது. ஆண்டுக்கு மனித யானை மோதல் காரணமாக சராசரியாக 70 மக்களும், 80 யானைகளும் கொல்லப்படுகின்றன.என்றும்,இத்துடன் பொருட்சேதமும் அதிகம் ஏற்படுகின்றன. 2001 தொடங்கி 2022 வரை மொத்தம் 1,330 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில் 2013ஆம் ஆண்டு அதிகபட்சமாக 107 யானைகள் உயிரிழந்துள்ளன. அதற்கடுத்து 2016இல் 97 யானைகளும், 2014இல் 92 யானைகளும் பலியாகியுள்ளனஎன தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags : 2010ஆம் ஆண்டு முதல் 12 வருடங்களில் 1501 யானைகள் உயிரிழந்துள்ளன