நீதிமன்றத்தில் ஆஜரானார் அண்ணாமலை
அவதூறு வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 14) பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆஜரானார். சொத்துக் குவிப்பு குறித்து தவறான தகவல்களை வெளிட்டதாக அண்ணாமலை மீது திமுக எம்பி டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், DMK Files என வெளியிட்டு தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பான வழக்கை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் விசாரணை நடைபெறுகிறது. இதனால், இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜரானார்.
Tags :