பெண்ணிடம் கைவரிசை காட்டிய மர்மகும்பல்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தொளார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கரிகாலசோழன் - ராணி தம்பதி.
டிரைவராக பணியாற்றும் கரிகாலன், அவ்வப்போது வேலைக்காக வெளியே சென்றுவிடுவார். இதனால் மனைவி ராணி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.
வழக்கம்போல் கரிகாலசோழன் வெளியே சென்றுவிட்டதால், இவரது மனைவியும், இவரின் அக்கா மகள் அனிஷாவும் இணைந்து வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மர்ம கும்பல் சிலர் வீட்டின் பின்கதவை உடைத்து, உள்ளே நுழைந்தனர்.
இதனையடுத்து வீட்டில் தூங்கிகொண்டிருந்த ராணி கழுத்தில் இருந்த 7 பவுன் தாலி செயினை அறுத்துக் கொண்டும், அனுஷாவின் கழுத்தில் இருந்த வெள்ளி செயினையும் அறுத்துக்கொண்டு மர்மநபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
இது குறித்து கரிகாலசோழன் மனைவி ராணி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து.
திருடு போன ராணி வீட்டை கைரேகை நிபுணர் மற்றும் மோப்பநாய்களை வரவழைத்து திருடன் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :