பள்ளி சீருடையில் மது அருந்தும் மாணவிகள்

by Staff / 23-03-2022 05:15:29pm
பள்ளி சீருடையில் மது அருந்தும் மாணவிகள்

 
அந்த வீடியோ காட்சிகளில் பள்ளி முடிந்து பேருந்தில் செல்லும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் பீரை குடித்துக் கொண்டும் அதனை மற்ற மாணவர்களுக்கும் பகிர்ந்து குடிப்பதோடு கூச்சலிட்டு கொண்டே அராஜகத்தில் ஈடுபட்ட வீடியோவை செல்போனில் படம்பிடித்த சிலர் அந்த வீடியோவை  முகநூல் இஸ்ட்ராகிராம், வாட்ஸப் என அனைத்து வலை தளங்களிலும் பதிவிட்டு பரப்பியதால்  பரபரப்பு நிலவியது.

இந்த மாணவ, மாணவிகள் செங்கல்பட்டு அருகே உள்ள பொன் விளைந்த களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருவது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் சமூக வலை தளங்களில் பேசும்பொருள் ஆகியுள்ள நிலையில்  அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகளும் அறிவுரைகளும் காவல்துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கேட்டபோது இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.


 
 

 

Tags :

Share via
Logo