கல்லூரி மாணவா் விஷம் குடித்து தற்கொலை

by Staff / 08-11-2023 03:31:28pm
கல்லூரி மாணவா் விஷம் குடித்து தற்கொலை

காயல்பட்டினத்தில் கல்லூரி மாணவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். காயல்பட்டினம், கோமான் கீழத்தெருவைச் சோ்ந்தவா் அப்துல்ரகுமான்(50). சமையல் வேலை செய்து வரும் இவருக்கு ஷரிப்பா பாத்திமா என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனா். மூத்த மகன் கதிா்முகமது(20), தூத்துக்குடி தனியாா் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளாா். மேலும் கல்லூரிக்கு செல்லாமல் விடுப்பு எடுத்துள்ளாா். இதனால் அவரது பெற்றோா் கண்டித்துள்ளனா். இதனால் மனமுடைந்த அவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

 

Tags :

Share via
Logo