ஆசிரியர் தினம் செப்டம்பர் 5: தேசிய நல்லாசிரியர் விருது பெறும் தமிழ்நாடு, புதுச்சேரி தமிழர்கள்

by Editor / 05-09-2021 12:47:32pm
ஆசிரியர் தினம் செப்டம்பர் 5: தேசிய நல்லாசிரியர் விருது பெறும் தமிழ்நாடு, புதுச்சேரி தமிழர்கள்

இந்திய அரசு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருதினை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தேர்வான 44 ஆசிரியர்கள் பட்டியல் சில வாரங்களுக்கு முன்புவெளியிடப்பட்டது.

அந்த பட்டியலில் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டம் பிரதியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.ஆஷா தேவி மற்றும் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை டி.லலிதா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் புதுச்சேரியில் மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர் வெ.ஜெயசுந்தர் தேர்வாகியுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர் வெ.ஜெயசுந்தர் (41) இந்த வருடம் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளார். அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த இவர், கிராமப்புற மாணவர்களுக்குப் புதுமையான முறையில் கல்வி கற்பிப்பதால் இவ்விருது வழங்கப்படவுள்ளது. வகுப்பறைக் கல்வி மட்டுமின்றி, செயல்முறை கல்வி, அனுபவக் கல்வி, தொழில்நுட்ப கல்வி, ஆன்லைன் முறையில் கல்வி என கிராமப்புற மாணவர்களுக்குப் புதுமையான முறையில் இவர் கல்வியைக் கற்பித்து வருகிறார்.

சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் அறிவியல் கண்காட்சி, அறிவியல் உருவாக்குவோம், குழந்தைகள் அறிவியல் மாநாடு போன்ற போட்டிகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தி அனுப்பியுள்ளார். 

 

Tags :

Share via