மதுவில் விஷம் கலந்து குடித்து காவலர் தற்கொலை

திருவள்ளூர்: செங்குன்றம் பாபாநகர் பகுதியில் தாய், தந்தையுடன் வசித்து வந்தவர் சதீஷ் (35). இவர் சென்னை ராஜமங்கலம் காவல்நிலையத்தில் 2ஆம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை சதீஷ் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் சதீஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகாததால் ஏக்கமா, உடல்நலக் கோளாறு ஏதேனும் காரணமா, அல்லது காவல்துறை மேல் அதிகாரிகளின் பணிச்சுமையால் தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :