மது அருந்த தடையாக இருந்த காவல்துறை சிசிடிவி கேமராவை உடைத்த இளைஞர்கள்

by Staff / 17-05-2022 02:01:38pm
மது அருந்த தடையாக இருந்த காவல்துறை சிசிடிவி கேமராவை உடைத்த  இளைஞர்கள்


மதுரை மாவட்டம் சோழவந்தானில்  மது அருந்துவதற்கு  தடையாக இருந்த காவல் துறை அமைத்த  சிசிடிவி கேமராவை உடைத்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சோழவந்தன் பகுதி முழுவதும் காவல்துறையினர் 48 சிசிடிவி கேமராக்கள் அமைத்து குற்றச் செயல்களை கண்காணித்து வந்ததால்  குற்றங்கள் குறைந்த வண்ணம் இருந்த இந்த நிலையில். மூன்று இளைஞர்கள் தாங்கள் மது அருந்துவதற்கு இந்த சிசிடிவி கேமராக்கள் தடையாக இருப்பதால் மதுபோதையில் அதனை உடைத்துள்ளனர் .இதுதொடர்பான புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி உதவியுடன் தொடர்புடைய மூன்று பேரையும் பிடித்து கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories