தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த காமெடி நடிகர் யோகி பாபு

by Editor / 11-09-2023 11:33:57pm
தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த காமெடி நடிகர் யோகி பாபு

தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்த காமெடி நடிகர் யோகி பாபு உடன் ரசிகர்கள் உற்சாகமாக செல்பி எடுத்துக் கொண்டனர்

திரையுலகத்தின் காமெடி நடிகரான யோகி பாபு தொடர் வெற்றி படங்களை கொடுத்து வந்த நிலையில் அனைத்து கோயில்களிலும் சாமி தரிசனம் செய்து வருகிறார். நேற்றைய தினம் திருச்செந்தூர் முருகப் பெருமான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து இன்று தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சினிமா படப்பிடிப்பிற்கு கலந்து கொள்ள வருகை தந்த நடிகர் யோகி பாபு
தென்காசி மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதும் பிரசித்தி பெற்றதுமான காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

காசி விஸ்வநாதர், உலகம்மனை தரிசனம் செய்த அவர் அடுத்ததாக முருகப் பெருமானை தரிசனம் செய்தார். தொடர்ந்து அவரை சூழ்ந்த ரசிகர்களிடம் உற்சாகமாக செல்பி எடுத்துக் கொண்டார்.

 

Tags : சுவாமி தரிசனம் செய்ய வந்த காமெடி நடிகர் யோகி பாபு

Share via

More stories