டெல்லி செங்கோட்டையில் குண்டு வெடிப்பு எதிரொலி தமிழக கேரள எல்லை செங்கோட்டையில் சோதனை.

by Staff / 10-11-2025 11:07:03pm
டெல்லி செங்கோட்டையில் குண்டு வெடிப்பு எதிரொலி  தமிழக கேரள எல்லை செங்கோட்டையில்  சோதனை.

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலி - தமிழக, கேரள எல்லைப் பகுதியில் உள்ள செங்கோட்டை வனத்துறை சோதனை சாவடி முன்பு தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர் மேலும் தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் பள்ளிவாசல் ஆலயங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும்.
 தென்காசி மாவட்டத்தில் 16 இடங்களில் இரண்டு ஏடிஎஸ்பிக்கள் ஐந்து டிஎஸ்பிக்கள் 24 ஆய்வாளர்கள் 400 காவலர்கள் அடங்கிய காவல்துறையினர் அதிரடி வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருவதாக தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் தகவல்.

 

Tags : டெல்லி செங்கோட்டையில் குண்டு வெடிப்பு எதிரொலி தமிழக கேரள எல்லை செங்கோட்டையில் சோதனை.

Share via