சபரிமலை அய்யப்பனை தரிசிக்க மாலை அணிந்து இருமுடிக்கட்டி வந்த பழங்குடியின மக்கள்

by Editor / 09-12-2023 10:05:47pm
சபரிமலை அய்யப்பனை தரிசிக்க மாலை அணிந்து இருமுடிக்கட்டி வந்த பழங்குடியின மக்கள்

கானகத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் கடந்த வருடத்தைப் போல இந்த வருடமும் சபரிமலைக்கு தரிசனம் செய்ய  வந்தனர். கேரளமாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர்  வனப் பகுதிகளில் உள்ள ஆழ் வனப்பகுதிகளிலிருந்து  107 பேர் கொண்ட பக்தர்கள் குழு மாலை அணிந்து தரிசனத்திற்கு வந்தனர். காட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட தேன், தூபவர்க்கம், நாணல் மற்றும் கரும்புகளில் நெய்யப்பட்ட மலர்கள் போன்ற கைவினைப் பொருட்களுடன் சபரிமலை சந்திதானத்திற்கு வந்தடைந்தனர்.

  குரு சுவாமிகளான உருமூப்பன் பகவான்கனி கூறுகையில், ஆண்டு தோறும் இக்குழுவினர் வந்து வன வளத்தை பார்க்கின்றனர்.  கானகத்தில் வசிக்கும் ஐயப்பன் தங்களின் வனக்கடவுள் என்றும், ஐயப்பனை தரிசனம் செய்வதன் மூலம் சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவதாகவும் கூறினார்.

சபரிமலை அய்யப்பனை தரிசிக்க மாலை அணிந்து இருமுடிக்கட்டி வந்த பழங்குடியின மக்கள்
 

Tags : சபரிமலை அய்யப்பனை தரிசிக்க மாலை அணிந்து இருமுடிக்கட்டி வந்த பழங்குடியின மக்கள்

Share via