எச்.சி.எல். நிர்வாக இயக்குநர்  பதவியில் இருந்து ஷிவ் நாடார் ராஜினாமா

by Editor / 20-07-2021 04:43:26pm
எச்.சி.எல். நிர்வாக இயக்குநர்  பதவியில் இருந்து ஷிவ் நாடார் ராஜினாமா



ஹெச்.சி.எல். நிர்வாக இயக்குநராக இருந்த ஷிவ் நாடார் தனது பதவியை  ராஜினாமா செய்துள்ளார்.
ஹெச்.சி.எல். நிர்வாக இயக்குநராக இருந்த ஷிவ் நாடார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருடைய ராஜினாமா உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், இயக்குநர் குழுவின் ஆலோசகராக ஷிவ் நாடார் தொடருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷிவ் நாடார் ராஜினாமாவை தொடர்ந்து, தற்போதைய தலைமை செயல் அதிகாரி விஜயகுமார் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நிர்வாக இயக்குநராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷிவ் நாடார் கடந்த ஆண்டே நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். இதையடுத்து அந்தப் பொறுப்பை, ஷிவ் நாடார் மகள் ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷிவ் நாடார் கடந்த 1976ம் ஆண்டு தனது நண்பர்களுடன் இந்த நிறுவனத்தை தொடங்கினார். 45 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக இந்த நிறுவனத்தை நடத்தி வந்தார். தொழில்நுட்பத் துறையில் பல முன்னெடுப்புகளை ஹெச்.சி.எல். செய்துள்ளது.
நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்-க்கு தேவையான மென்பொருளை ஹெச்.சி.எல். வடிவமைத்தது. தற்போது, இந்தியாவின் மூன்றாவது பெரிய மென்பொருள் நிறுவனமாக ஹெச்.சி.எல். திகழ்கிறது.
ஹெச்.சி.எல் நிறுவனத்தில் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட பங்குகளை ஷிவ் நாடார் வைத்திருக்கிறார். இதுதவிர, ஐபிஎம் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி வனிதா நாராயணன் ஹெச்.சி.எல் இயக்குநர் குழுவில் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

 

Tags :

Share via