தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்

by Staff / 06-12-2023 03:34:09pm
தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்

மிக்ஜாம் புயல் சேதங்களை தேசிய பேரிடராக அறிவிக்க எம்.பி. டி.ஆர்.பாலு கோரிக்கை வைத்துள்ளார். மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் சென்னையே மூழ்கியுள்ளது. சென்னையில், மக்களின் இயல்பு வாழ்க்கை கடந்த மூன்று நாட்களாக முடங்கி போய் உள்ளது. இந்த பாதிப்புக்களை சீர் செய்ய தமிழக அரசு மத்திய அரசிடம் ரூ.5000 கோடி நிவாரணம் கேட்டுள்ளது. இந்நிலையில், இந்த மழை பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
 

 

Tags :

Share via

More stories

Logo