நாய் கடித்து உயிரிழந்த பட்டதாரி .

by Staff / 10-07-2025 10:17:48am
நாய் கடித்து உயிரிழந்த   பட்டதாரி .

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நாய் கடித்து எட்வின் பிரியன் என்ற இளைஞர் உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் தின்னூர் கிராமத்தை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி எட்வினை நாய் கடித்த நிலையில், உரிய சிகிச்சை எடுக்காத‌தால் ரேபிஸ் பாதித்துள்ளது. இது பற்றி வீட்டில் யாரிடமும் கூறாமலும், அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமலும் இருந்துள்ளார். இந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் பிரிந்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : Graduate dies after being bitten by a dog.

Share via