80ஆண்டுப்பழமை வாய்ந்தபள்ளியில் மேற்கூரை இடிந்துவிழுந்தது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அமைந்துள்ளது 1945 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட பழமை வாய்ந்த (ராமமந்திரம் ஆங்கிலப்பள்ளி)பின்னாளில் ஆரியநல்லூர் அரசு தூக்கப்பள்ளியானது.(நாசா சார்பில் சூரியனை ஆய்வு செய்ய விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஆதித்யா எல் -1 விண்கலத்தின் திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி பயின்ற பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது)
இந்த பள்ளியில் 150 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் மிகவும் பழமை வாய்ந்த இந்த பள்ளி வளாகத்தில் தொடக்கப்பள்ளி அலுவலர் அலுவலகம் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. மற்றொரு பகுதியில் இன்று காலை வழக்கம்போல் பள்ளியின் உடைய பணியாளர்கள் பள்ளியை திறந்து மாணவர் வருகைக்காக வகுப்பறை கட்டிடங்களில் இருந்த பொழுது பள்ளி நுழைவுப் பகுதியில் அமைந்துள்ள ஆசிரியர்கள் அலுவலக அறையை திறந்து உள்ளனர். மாணவர்கள் வருகையும் அப்பொழுது தொடங்கியுள்ளது அந்த அலுவலக கட்டிடம் அமைந்துள்ள பகுதியில் தான் பள்ளிக்கு மாணவர்கள் செல்லும் வாயிலும் அமைந்துள்ளது இந்த நிலையில் திடீரென நேற்று பெய்த கனமழையின் காரணமாக பள்ளியி னுடைய தலைமை ஆசிரியர் மற்றும் அலுவலகம் அமைந்துள்ள அறையின் மேற்கூரை இடிந்து விழுந்து உள்ளது அந்த சமயம் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் யாரும் அந்த பகுதிவழியாக செல்லவில்லை இதன் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது இது குறித்து தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தொடர்ந்து அவர்கள் இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் மேலும் பழமை வாய்ந்த அந்த கட்டிடங்களில் பராமரிப்பு பணிகள் இல்லாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது..
Tags : 80ஆண்டுப்பழமை வாய்ந்தபள்ளியில் மேற்கூரை இடிந்துவிழுந்தது.