சாலையில் தேங்கிக் கிடக்கும் குப்பை..துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி..கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்..

by Staff / 30-08-2024 03:35:02pm
 சாலையில் தேங்கிக் கிடக்கும் குப்பை..துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி..கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்..

திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் வேங்கிக்கால், நொச்சிமலை, கீழ்நாச்சிபட்டு, ஏந்தல், தென்மாத்தூர் உள்ளிட்ட 18 ஊராட்சிகளை திருவண்ணாமலை நகராட்சியில் இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 

திருவண்ணாமலை வேலூர் சாலையில் வேங்கிக்கால் மற்றும் வேங்கிக்கால் புதூர் ஆகிய இரண்டு ஊராட்சிகளில் சுமார் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த பல நாட்களாக குப்பைகள் கொட்டப்பட்டு அதனை வராமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர். குறிப்பாக தற்பொழுது மழை பெய்து வரும் நிலையில் மழை நீரில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. 

திருவண்ணாமலை வேலூர் பிரதான சாலையில் சாலையின் இரு புறங்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டு தேங்கி நிற்கிறது.

சாலையில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த இடத்தை கடக்கும்போது மூக்கை பிடித்துக் கொண்டும், முகத்தே சுளித்துக் கொண்டும் செல்வது பெரும் துயரமாக உள்ளது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட திருவண்ணாமலை மாவட்டம் குறிப்பாக திருவண்ணாமலை ஆன்மீக நகரத்தில் இதுபோன்று குப்பைகளை தேங்காமல் உடனடியாக குப்பைகளை வாரி நோய் தொற்று ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

 

Tags :

Share via