அரக்கோணம் தண்டவாளம் சீரமைக்கும் பணி; மின்சார ரயில்கள் இரண்டு நாட்களுக்கு ரத்து;

by Staff / 30-08-2024 03:38:39pm
அரக்கோணம்  தண்டவாளம் சீரமைக்கும் பணி; மின்சார ரயில்கள் இரண்டு நாட்களுக்கு ரத்து;

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில்  அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக அரக்கோணம் ரயில் நிலையத்திற்கும் அதன் வழியாக செல்லும் ரயில்கள் காலதாமதம் இன்றி செல்லவும் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடை மேடைகளில் ரயில்கள் வந்து செல்ல  தண்டவாளத்தை முழு வீச்சில் சீரமைக்கும் பணிகள் இன்று நடைபெறுகிறது.


அதிநவீன கருவிகளுடன் இந்த பணி செய்ய உள்ளதால் தற்போது அந்தப் பகுதியில் தண்டவாளத்து பொருத்தும் இயந்திரங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.


இந்தப் பணி 30 மற்றும் 31 இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு காலை 11 மணி அளவில் தொடங்கி மாலை 4 மணிக்கு நிறைவடையும்.இதனால் அரக்கோணம் திருத்தணியில் இருந்து  செல்லும் மின்சார ரயில்கள் சென்னையிலிருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் திருத்தணி வரும் மின்சார ரயில்கள் அனைத்தும் காலை 10.30 மணி அளவில் இருந்து மாலை 4 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரக்கோணம் திருத்தணி வரும் ரயில்கள் மற்றும் புறப்படும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

அரக்கோணத்தை அடுத்த திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை செல்லும் ரயில்கள் மற்றும் சென்னையில் இருந்து திருவள்ளூர் வரும் ரயில்கள் அனைத்தும் வழக்கம் போல் இயக்கப்படும் எனவும் பயணிகள் இதன் கருத்தில் கொண்டு தங்கள் பயணத்தை தொடர ரயில்வே துறை கேட்டுக் கொண்டுள்ளது.

 வழக்கம்போல் சென்னையில் இருந்து அரக்கோணம் வழியா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் எனவும் ஆனால் பணிக்கு ஏற்ப சற்று காலதாமதமாக இயங்க வாய்ப்புள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

தற்போது நடைபெறும் இந்த பணி நிறைவடைந்தால் சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக செல்லும் ரயில்கள் மிக வேகமாக செல்லவும், குறுகிய நேரத்தில் பல்வேறு ரயில் நிலையங்கள் செல்லும் எனவும் அரக்கோணம் நடைமேடையில் அனைத்து நடைமேடைகளிலும் ரயில்கள் நிற்கவும் சிக்னல் காரணமாக தற்போது ஏற்படும் காலதாமதம் இனி ஏற்படாது எனவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும்  இந்த பணியின் காரணமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக அரக்கோணம் திருவள்ளூருக்கு இடையிலான மோசூர் திருவலங்காடு ,மணவூர் ,செஞ்சி பனாம்பாக்கம், கடம்பத்தூர், ஏகாட்டூர் போன்ற ஊருக்கு பயணிகள் செல்ல கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via