திருமாவளவன் கூட பிரதமர் ஆகலாம் ஈவிகேஎஸ் இளங்கோவன்

by Staff / 31-05-2024 05:18:04pm
திருமாவளவன் கூட பிரதமர் ஆகலாம் ஈவிகேஎஸ் இளங்கோவன்

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இண்டியா கூட்டணியினர் ஒன்று சேர்ந்து, பிரதமர் குறித்து முடிவு எடுப்பார்கள். ஸ்டாலினும், ராகுலும் யாரை நினைக்கிறார்களோ அவர்கள் பிரதமராக வர வாய்ப்புள்ளது. ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்ற யோசனையை திருமாவளவன் சொல்லியிருக்கிறார். தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.,யானால், அவரும் பிரதமராக வர வாய்ப்பிருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஐந்து பிரதமர் என்பது வராது. ஒருவேளை, அப்படி வந்தால் என்ன நஷ்டம்? அதிகாரிகள் மாற்றப்படுவதில்லையா 10 ஆண்டுகளாக ஒரே பிரதமர் இருந்தும் பயனில்லை என தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

 

Tags :

Share via