கால வரையறை இன்றி போர் நிறுத்தத்தை நீடித்து உள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் நீடிக்குமாறு பாகிஸ்தான் மத்தியஸ்தர் குழு கேட்டுக் கொண்டதற்கு இணங்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தத்திற்கான ஒருங்கிணைந்த முன்மொழிவை முன் வைக்க ஹெக்கிரானுக்கு அவகாசம் அளிக்கும் பொருட்டு கால வரையறை இன்றி போர் நிறுத்தத்தை நீடித்து உள்ளார். இரு தரப்பினரும் எதிரெதிர் கடல்சார் உத்திகளை கடைபிடிப்பதால் இந்த போர் நிறுத்தம் மிகவும் பலவீனமாகவே உள்ளது .பொருளாதார அழுத்தத்தை தொடர்வதற்காக ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடற்படைகள் மீதான தனது முற்றுகையை தொடருமாறு அமெரிக்க கடற்படைக்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஒரு நாளைக்கு ஈரானுக்கு சுமார் 500 மில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்துவதாக கூறப்படும் இந்த முற்றுகை பேச்சுவார்த்தைகள் முடிவடையும் வரை தொடரும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகின்றனர். அமெரிக்காவின் முற்றுகை தொடரும் வரை ஹார்முஸ் ஜல சந்தியை மீண்டும் திறப்பது சாத்தியமில்லை என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். இந்த கடல் சார் கட்டுப்பாடுகளை போர் நிறுத்தத்தின் அப்பட்டமான மீறல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரப் பணய கைதிகள் என்று அவர்கள் விவரிக்கும் செயல் கடன் போர் நிறுத்தம் இணைந்திருந்ததால் அதற்கு அர்த்தம் இல்லை என்று தேக்கரான் குறிப்பிட்டுள்ளது.
Tags :


















