தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

by Admin / 23-04-2026 06:18:14pm
தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

 தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. காலை 7 மணியிலிருந்து மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நேரமாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது இதன்படி மாலை 6:00 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. வாக்குப்பதிவு நேரம் முடிந்திருந்தாலும் வாக்குப்பதிவிற்க்காக வாக்குச்சாவடிக்குள் இருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு கடைசி நபர் வரை வாக்கை பதிவு செய்துவிட்டு செல்ல அனுமதி வழங்கப்படும்.ஆறு மணிக்கு பிறகு வாக்கு பதிவிற்கு வருபவர்களை அனுமதிப்பதில்லை.மே மாதம் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. அன்றுதான் எந்த கட்சி ஆட்சி அமைக்க போகிறது என்கிற நிலவரம் தெரியவரும். படைப்புகளை தாண்டி வாக்குப்பதிவு நிகழ்ந்திருப்பதனால் எதையும் உறுதியாக சொல்ல முடியாமல் அரசியல் நோக்கர்கள் திணறி வருகிறார்கள்.கேரளா ,அசாம் ,பாண்டிச்சேரி மூன்று மாநிலங்களிலும் நடந்து முடிந்த தேர்தலில் அதிகமான வாக்குப்பதிவுகள் நடந்திருக்கின்றன. அதே நிலையிலேயே இப்பொழுது தமிழ்நாட்டிலும் மேற்கு வங்காளத்திலும் 80 சதவீதத்திற்கு மேல் பதிவாகி இருப்பதனால் யாருக்கான வெற்றியை இது நிர்ணயிக்கப் போகிறது என்பதை வாக்கு எண்ணிக்கையில் தான் தெரியும்.

 

Tags :

Share via
Logo