ஐ லீக் கால்பந்து தொடரில் முதல்வர் ஸ்டாலினின் பேரன்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பேரனும், எம்.எல்.ஏ உதயநிதியின் மகனுமான இன்பன் உதயநிதியை, ஐ லீக் கால்பந்து தொடரில் பங்கேற்கவுள்ளார்.
இந்தியன் ஐ-லீக் கால்பந்து தொடர் இந்தியாவின் பிரபலமான போட்டிகளில் முக்கியமானதாக விளங்கி வருகிறது.
கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த தொடர், இந்தியாவில் நடைபெறும் மிகவும் முக்கியமான தொழிற்முறை தொடர்களில் ஒன்றாகும்.ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் இந்த போட்டியில் கடந்தாண்டு கேரளா எஃப்சி அணி வெற்றி பெற்று அசத்தியது. இந்நிலையில் இந்தாண்டுக்கான ஐ.லீக் தொடருக்கான வீரர்கள் தேர்வு மற்றும் ஒப்பந்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.நெரோகா எஃப்சி (North East Reorganising Cultural Association) என்ற கால்பந்து அணி, தமிழக முதல்வரின் பேரனும், எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பன் உதயநிதியை ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தன்னுடைய சமூக வலைதளபக்கத்தில் அந்த அணி வெளியிட்டுள்ளது.இன்பன் உதயநிதி தேர்வாகியுள்ள நெரோகா எஃப்சி அணி ஐ எஃப் கால்பந்து அணியில் வளர்ந்து வரும் அணியாக பார்க்கப்படுகிறது. 2016-17-ஆம் ஆண்டில் டிவிஷன் பிரிவில் வெற்றி பெற்ற இந்த அணி முதல் முறையாக ஐ-லீக் கால்பந்து தொடரில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றது. இந்த அணி கடைசியாக நடைபெற்ற 2020-21-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐ-லீக் தொடரில் கடைசி இடம்பிடித்தது.இந்தாண்டு சிறந்த வீரர்களுடன் களமிறங்கி கோப்பையை வெல்ல திட்டமிட்டுள்ள இந்த அணி ஒவ்வொரு வீரராக பட்டியலிட்டு தேடிபிடித்து வருகிறது. அந்த வகையில் எம்.எல்.ஏ உதயநிதியின் மகன் இன்பன் உதயநிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Tags :













.jpg)





