கர்நாடக தேர்தல் - அதிமுக ஒரு தொகுதியில் போட்டி

by Staff / 19-04-2023 12:43:29pm
கர்நாடக தேர்தல் - அதிமுக ஒரு தொகுதியில் போட்டி

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் மே மாதம் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. அங்கு ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகள் களம் காண்கின்றன. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுகவும் அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பில் அம்மாநில அவைத்தலைவர் அன்பரசன் போட்டியிடவுள்ளதாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதனால் கட்சியினர் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via