ஆர்.எம்.வீரப்பன் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

by Staff / 09-09-2023 01:05:57pm
ஆர்.எம்.வீரப்பன் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

எம்.ஜி.ஆர் கழகத்தின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் 98வது பிறந்தநாளையொட்டி அவரது இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எம்.பி. ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது குறித்து ட்வீட் செய்துள்ள முதல்வர், எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், கலைஞர் மீது அளவற்ற மதிப்பும், அன்பும் கொண்டவருமான அண்ணன் ஆர்.எம்.வீரப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நம் பாசத்திற்குறிய ஆர்.எம்.வி. நூறு ஆண்டுகள் கடந்தும் முழு நலத்துடன் வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via