தாமதக் கட்டணத்தோடு சம்பர் 31 ஆம் தேதிக்குள் வருமானவரி தாக்கல் செய்யலாம்.
தனிப்பட்ட வரி செலுத்துவோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை தற்போது மத்திய அரசு நீட்டித்துள்ளனர். ஜூலை 31 ஆம் தேதி அன்று முடிவடைந்த காலக்கெடு 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டில் மக்கள் தங்கள் வருமானத்தை வெளியிடவில்லை என்றால் இப்போது தாமதக் கட்டணம் செலுத்தி ஐடிஆர் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பவர்கள் ரூ.5,000 மற்றும் ரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள் ரூ.1,000 அபராதத்துடன் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ஐடிஆர் தாக்கல் செய்யலாம்.
Tags :