ஈசா மையத்திலிருந்து ஓடிய பெண் கிணற்றில் சடலமாக மீட்பு

கோவை ஈசா மையத்திற்கு பயிற்சிக்காக சென்ற சுபஸ்ரீ என்ற பெண் கடந்த மாதம் மாயமானதாக புகாரளிக்கப்பட்டது.கடந்த 18ம் தேதி அங்கிருந்து ஓடிச்செல்லும் காட்சிகள் சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. தனிப்படை அமைத்து போலீசார் அவரை தேடி வந்தனர்.இந்த நிலையில் அவர் செம்மேடு அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags :