இன்று அண்ணா நினைவு நாளையொட்டிமுதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடந்தது.

by Admin / 03-02-2026 10:10:47am
இன்று அண்ணா நினைவு நாளையொட்டிமுதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடந்தது.

இன்று பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாளை ஒட்டி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னை வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் வரை பிரமாண்ட அமைதி பேரணி நடந்தது. இப்பேரணியில் பொதுச் செயலாளர் துரைமுருகன் பொருளாளர் டி .ஆர். பாலு அமைச்சர்கள், நாடாளுமன்ற- சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் கருப்பு சட்டையுடன் பங்கேற்றனர். பேரணி முடிவில் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இது குறித்து முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தம் எக்ஸ் பதிவில்,

நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு! அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது கழக அரசு. மொழித் திணிப்பு - பண்பாட்டுத் திணிப்பு - நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்களைச் செய்துகொண்டு, துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும், பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில்  கெட்அவுட்தான். ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார் .இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.

 

Tags :

Share via

More stories