ரூ.35 இலட்சம் செலவில் வாசலில் வைரக்கற்களில் வாசகம்
நடிகர் ஷாருக்கானின் மன்னத் வீடு மிகவும் பிரபலமானது. அவரது பிறந்த நாளுக்கு முதல் நாள் இரவே ரசிகர்கள் அவரது வீடு முன்பு குவிந்து விடுவது வழக்கம். இவரது வீடு மன்னத் என்று அழைக்கப்படுகிறது. முன்பு இவரது வீட்டு பெயர் பலகை கருப்பு வர்ணத்தில் இருந்தது. இதை நீக்கிவிட்டு, கடந்த ஏப்ரல் மாதம் இவரது வீட்டுக்கு வெளியே இருபுறமும் வைரக் கற்கள் பதிக்கப்பட்ட பெயர் பலகை அமைக்கப்பட்டது. "மன்னத் லேண்ட்ஸ் என்ட்" என்று ஆங்கிலத்தில் எழுத்துக்கள் பதிக்கப்பட்டு, அவற்றை சுற்றி வைரக்கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. ஆனால், இவற்றில் சில கற்கள் விழுந்துவிடவே, அந்த பெயர் பலகை நீக்கப்பட்டது. தற்போது, பழுது செய்யப்பட்டு வைரக் கற்கள் பதிக்கப்பட்ட பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது. இந்தப் பெயர் பலகையில் அமைக்கப்பட்டிருக்கும் வைரக் கற்களின் மதிப்பு ரூ.35 லட்சம் எனக் கூறப்படுகிறது.
Tags :



















