இந்த 3 கட்சிகளுமே ஒன்று தான் - பிரியங்கா காந்தி சாடல்

by Staff / 20-11-2023 11:51:11am
இந்த 3 கட்சிகளுமே ஒன்று தான் - பிரியங்கா காந்தி சாடல்

பாரத் ராஷ்டிரிய சமிதி, ஏஐஎம்ஐஎம், பாஜக ஆகிய 3 கட்சிகளும் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றன என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ஹைதராபாதில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், "மத்தியில், பாஜகவை, பிஆர்எஸ் கட்சி ஆதரிக்கிறது. இந்த 3 கட்சிகளுக்கும் இடையே ஒரு மறைமுக கூட்டணி ஒப்பந்தம் உள்ளது. நீங்கள் பிஆர்எஸ் அல்லது ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு வாக்களித்தால், அது பாஜகவுக்கு வாக்களிப்பதற்கு சமம். மக்கள் அந்த தவறை செய்யக்கூடாது என கேட்டுக் கொண்டுள்ளார். தெலங்கானா சட்டமன்ற தேர்தல் வரும் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது.

 

Tags :

Share via