முன்னாள் அமைச்சர் மனைவிக்கு சிறை

by Staff / 20-11-2023 12:05:00pm
முன்னாள் அமைச்சர் மனைவிக்கு சிறை

அதிமுக முன்னாள் அமைச்சர் ஏ.எம்.பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு விதித்த ஓராண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக ரூ.38 லட்சம் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் நல்லம்மாளுக்கு சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை விதித்திருந்தது. இதை எதிர்த்து நல்லம்மாள் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது.

 

Tags :

Share via

More stories