கூடங்குளம் அணு மின் நிலைய யூனிட் 5 ,6 கட்டுமானப் பணிகள் துவக்கம்

by Editor / 29-06-2021 05:10:52pm
கூடங்குளம் அணு மின் நிலைய யூனிட் 5 ,6 கட்டுமானப் பணிகள் துவக்கம்

 

நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின்  5 மற்றும் 6வது அணு உலைக்கான கட்டுமானம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 
இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் உற்பத்தி  நிலையமான இங்கு  ரஷ்ய கூட்டமைப்புடன் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் அதிநவீன முறையில் அமைக்கப்பட்டவை. ஆலை, பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில், மிக உயர்ந்த பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மேம்பட்ட, பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்கள் இந்த ஆலையில் உள்ளது
ரஷ்யா ) உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட முதலாவது மற்றும் இரண்டாவது அணு உலைகளில் முறையே 2014-ம் ஆண்டும்,  2016-ம் ஆண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.

 

Tags :

Share via