ஜனநாயகன் பட வழக்கு- தணிக்கை வாரியத்தின் தரப்பு வாதத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க கூடாது.

by Admin / 13-01-2026 03:11:02am
ஜனநாயகன் பட வழக்கு- தணிக்கை வாரியத்தின் தரப்பு வாதத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க கூடாது.

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் தணிக்கை குழு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்து உள்ளது. ஜனநாயகன்படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரு நீதிபதி அமர்வு இடைக்கால தடை விதித்தது இந்த தடையை எதிர்த்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்சன் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தயாரிப்பு நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் போது தணிக்கை வாரியத்தின் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்தவிதமான இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்பதற்காக இந்த கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. தணிக்கை வாரியத்தின் இந்த நடவடிக்கையால் உச்சநீதிமன்ற வழக்கின் இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கும். முன்னதாக mஜனவரி 9ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த படம் வெளியீடு இந்த சட்ட சிக்கலால் தள்ளிப் போய் உள்ளது .சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 21 2026 அன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via