அண்ணாமலை ஒரு தேசிய அளவிலான பாஜக தலைவர் கிடையாது.-மகாராஷ்டிரா , மாநில முதலமைச்சர் ர் தேவேந்திர பட்னாவிஸ்,
மகாராஷ்டிரா , மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஜனவரி 15 2026 அன்று நடைபெற உள்ள மும்பை மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் செய்த அண்ணாமலை மும்பை மகாராஷ்டிராவின் நகர மட்டுமல்ல அது ஒரு சர்வதேச நகரம் என்று கூறியிருந்தார் இந்த கருத்து மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த பிரச்சனை குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அண்ணாமலை ஒரு தேசிய அளவிலான பாஜக தலைவர் கிடையாது .அவர் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் மட்டுமே அவரது கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்றும் அதை மிக தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் அண்ணாமலைக்கு ஹிந்தி சரியாக தெரியாததால் அவர் மும்பை என்பதற்கு பதிலாக பாம்பே என்று தவறாக குறிப்பிட்டு இருக்கலாம் என்றும் அவரது கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். சிவசேனா மற்றும் மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா போன்ற எதிர்கட்சிகள் அண்ணாமலையின் பேச்சை தீவிரமாக விமர்சித்து வரும் நிலையில், பட்னாவிஸ் இவ்வாறு கூறி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Tags :


















